Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா: முத்து நெடுமாறனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா: முத்து நெடுமாறனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

1256
0
SHARE
Ad

IMG_9674

கோலாலம்பூர், அக் 21 – மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, மலேசியாவில் வெவ்வேறு துறைகளில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய அறிஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதன்படி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.துரைராஜ், உமா பதிப்பக உரிமையாளர் டத்தோ ஆ.சோதிநாதன், கணினியில் தமிழைக் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவரும், முரசு மென்பொருள்,மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்துநெடுமாறன்(படம்) மற்றும் தமிழ்ச்சீலர் ம.செ.மாயத்தேவன் ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இது தவிர முனைவர் முரசு நெடுமாறன் (படம்), அருசு ஜீவானந்தம், மா.இராமையா என மொத்தம் 46 தமிழ் அறிஞர்கள் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.IMG_9684

முத்து நெடுமாறன் அவர்கள் தனது ஏற்புரையில் கூறியிருப்பதாவது:-

“விருது வழங்கி கௌரவிப்பவர்களின் பட்டியலில் என்னையும் இணைத்தமைக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் ஒரு தமிழ் எழுத்தாளர் இல்லாவிட்டாலும் கூட, நவீன கருவிகளில் தமிழை உள்ளிடுவதற்குத் தேவையான செயலிகளை வடிவமைப்பதில் எனது பங்கினை செய்து வருகின்றேன்.அதன் மூலம் தமிழ் எழுத்தாளர்கள் பல நல்ல தமிழ் படைப்புகளை கொடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.”

“இந்த பொன்விழாவின் மூலம் பல வருடங்களாக மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பங்காற்றி வரும் எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்ததற்கும் மென்மேலும் பல புதிய படைப்புகளின் உருவாக்கத்திற்கு ஊக்கம் கொடுத்ததற்கும் விருது பெற்றோரின் சார்பில் எழுத்தாளர் சங்கத்திற்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் ” இவ்வாறு தெரிவித்தார்.

– செய்திகள், படங்கள் 

பீனிக்ஸ்தாசன்