Home நாடு “பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – கமலநாதன் உறுதி

“பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – கமலநாதன் உறுதி

632
0
SHARE
Ad

IMG_9634கோலாலம்பூர், அக் 21 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த கல்வித் துணையமைச்சர் கமலநாதன், தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சி தமிழ் செய்திகள் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

கமலநாதனின் உரை பின்வருமாறு:-

“உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் மலேசியாவில் மட்டும் தான் தமிழர்கள் வாழ்கிறார்கள். அதற்கு நல்ல உதாரணம் என்று சொன்னால் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.”

#TamilSchoolmychoice

“பெர்னாமா தமிழ் செய்திகளை மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை மிக நியாயமானது. அது குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசி நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.” என்று தெரிவித்தார்.

– பீனிக்ஸ்தாசன்