Home அரசியல் அலி ருஸ்தாமிற்கு பலத்த அடியாக உருவான அம்னோ உதவித் தலைவர் தேர்தல்

அலி ருஸ்தாமிற்கு பலத்த அடியாக உருவான அம்னோ உதவித் தலைவர் தேர்தல்

526
0
SHARE
Ad

ali-rustam1

கோலாலம்பூர், அக். 21- சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ உதவித் தலைவருக்கான தேர்தலில்  மலாக்காவிலுள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான டத்தோஸ்ரீ அலி ருஸ்தாம் அம்னோவின் உதவித் தலைவராவதற்கு ஆதரவளிக்கவில்லை. இது அவரது அரசியல் வாழ்க்கையில் பலத்த அடியாக வர்ணிக்கப்படுகிறது.

மஸ்ஜித் தானா, அலோர் காஜா, கோத்தா மலாக்கா மற்றும் ஜாசின் மட்டுமின்றி மலாக்கா மாநில முதலமைச்சரான டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹரூன் தலைவராக இருக்கும் தங்கா பத்து தொகுதியும் அலி ருஸ்தாமிற்கு ஆதரவளிக்கவில்லை என பெரித்தா ஹரியான் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

13 ஆண்டுகள் மலாக்கா மாநிலத்தின் அம்னோ தலைவராக விளங்கிய அலி ருஸ்தாமிற்கு அவர் தலைவராக பதவி வகிக்கும் புக்கிட் கட்டில் தொகுதி முழுமையான ஆதரவு வழங்காதது அவருக்கு பலத்த அடியாக விழுந்துள்ளதாகவும் அத்தொகுதியில் அலி ருஸ்தாம் பேராளர்களின் இரண்டாம் நிலையிலான வேட்பாளராக மட்டுமே இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலி ருஸ்தாமிற்கு 7 தொகுதிகளிலிருந்து 15,294 வாக்குகள் கிடைத்த வேளையில் டான்ஸ்ரீ முஹம்மட் இசா சாமாட்டிற்கும் 7 தொகுதிகளிலிருந்து 12, 783 வாக்குகளும் டத்தோ முக்ரிஸ் மகாதீருக்கு 93 தொகுதிகளிலிருந்து 57,189 வாக்குகளும் கிடைத்தன.

அதேவேளையில், இத்தேர்தலில் அஹ்மாட் ஷாகிட்டிற்கு 188 தொகுதிகளிலிருந்து 94, 562 வாக்குகளும் முஹம்மட் ஷாபி அப்டாலுக்கு 177 தொகுதிகளிலிருந்து 82,252 வாக்குகளும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடினுக்கு 101 தொகுதிகளிலிருந்து 56,604 வாக்குகளும் கிடைத்தது. அவர்கள் மூவரும் மீண்டும் அம்னோ உதவித் தலைவர்களாக தங்களின் பதவியைத் தற்காத்துக்கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.