Home Featured நாடு சிறப்புப் பணிக்குழு நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அலி ருஸ்தாம் வலியுறுத்து!

சிறப்புப் பணிக்குழு நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அலி ருஸ்தாம் வலியுறுத்து!

664
0
SHARE
Ad

Ali Rustamகோலாலம்பூர் – 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரேபியாவின் அமைச்சரே ஒப்புதல் அளித்துவிட்டதால், பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அம்னோ தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மலாக்கா முதலமைச்சரும், செனட்டருமான அலி ருஸ்தாம், இன்னும் ஒரு படி மேலே போய், 1எம்டிபி மற்றும் 2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவும் நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“பணிக்குழு அமைக்கப்பட்ட போது, பிரதமர் தவறு செய்திருக்கிறார் என்ற எண்ணம் மக்களுக்கு உருவானது. உண்மையாக அது ‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பரப்பிய அவதூறு தான்”

#TamilSchoolmychoice

“அதன் காரணமாக தான் பிரதமர் மற்றும் நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. இது மறுபடி நிகழக்கூடாது. சிறப்புப் பணிக் குழு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்ததாக இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.