Home நாடு தலைமுடி உதிர்கிறதா ?

தலைமுடி உதிர்கிறதா ?

497
0
SHARE
Ad

Male-Hair-Loss-Mirror

அக் 22- குறைந்த எண்ணிக்கையிலான முடி உதிர்தலை சாதரணமாக விட்டுவிடலாம். ஆனால், இன்று ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கொத்து கொத்தாக கொட்டுகிறது.இப்பிரச்சனையைக் களைய இதோ சில எளிய முறைகள் :

 1) சீப்பில்கவனம் தேவை

#TamilSchoolmychoice

உங்களுக்கென தனி சீப்பை பயன்படுத்துங்கள். தினமும் சீப்பை நன்றாக ஒரு தூரிகை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

 2) வாரத்திற்கு 3 அல்லது 4 முறை தலை குளிக்கவும்

தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் நிலை ஒத்துழைக்கவில்லையேல் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாளாவது தலைக் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

3) ஷாம்பூக்கள்ஜாக்கிரதை

அதிகமான  இரசாயனம் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவதை நிறுத்தி  இயற்கையான அல்லது கேடு விளைவிக்காத ஷாம்பூக்களை பார்த்து வாங்கி பயன்படுத்தவும். சீயக்காய் மூலப் பொருட்களை வாங்கி வீட்டில் தயார் செய்தும் தலை முடியை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளலாம்.

 4) மன இருக்கத்தை தவிர்க்கவும்

மன இருக்கதினாலும் முடி உதிறும். எனவே, மனதை சாந்தமாக அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யவும்.

 5) எண்ணெய் பயன்படுத்தவும்

தூய்மையான தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துங்கள். அடிக்கடி எண்ணெய்யை மாற்றாதீர்கள்.