Home நாடு “கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” – நஸ்ரி கருத்து

“கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” – நஸ்ரி கருத்து

452
0
SHARE
Ad

nazri_isu featureகோலாலம்பூர், அக் 22 – சபா, சரவாக் மாநிலங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பகுதிகளில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் தீபகற்ப மலேசியாவில் அச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி தெரிவித்துள்ளார்.

அல்லாஹ் என்ற சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாகப் பேசிய நஸ்ரி, கிழக்கு மலேசியாவின் கலாச்சாரம் வேறு,தீபகற்ப மலேசியாவின் கலாச்சாரம் வேறு என்றும், இவை இரண்டும் ஒன்றாகக் கலக்கக்கூடாது என்றும் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், ‘அல்லாஹ்’ என்ற சொல்லை சபா, சரவாக்கில் வாழும் கிறிஸ்துவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும், காரணம் நூற்றாண்டுகளாக அவர்களின் வழக்கம் அது தான் என்றும் நஸ்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால் அவர்கள் தீபகற்ப மலேசியாவிற்குள் வரும் போது இங்குள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். காரணம் தீபகற்ப மலேசியாவில் அச்சொல்லை கிறிஸ்தவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.

தனக்கு மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலையில்லை என்று தெரிவித்த நஸ்ரி, சபா, சரவாக் மக்கள் தீபகற்ப மலேசியாவிற்கு வரும் போது இங்குள்ள பழக்கவழக்கங்களையும், பாரம்பரியங்களையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.