Home இந்தியா 10 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.640 கோடி!

10 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.640 கோடி!

510
0
SHARE
Ad

96448519-23cb-4cdd-8dbb-fbe6a5b3a7f5HiRes

புது டில்லி,அக் 22- பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, மக்களின் வரிப்பணம், 640 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் வகையில், இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பிரதமரின் இந்த பயணங்களால் பெரிய அளவில் நாட்டுக்கு பயன் இல்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசகாங்க தலைமயிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முதல் முறையாக 2004இல் ஆட்சிக்கு வந்தது. பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார். இதற்கு பின், 2009இல் நடந்த லோக் சபா தேர்தலிலும் ஐ.மு., கூட்டணியே வெற்றி பெற்றது. மன்மோகன் சிங்கே, பிரதமராக மீண்டும் பதவியேற்றார்.இந்த, 10 ஆண்டுகளில், சர்வதேச நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்துவதற்காக இதுவரை 70 முறை அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, மக்களின் வரிப் பணத்திலிருந்து 640 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதில், அதிகபட்சமாக 2012ல் மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதற்காக, 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2010இல் அமெரிக்காவுக்கு சென்றபோது 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.கூட்டத்தொடர் நடக்கும்போதும் பயணம்குறிப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த நாடளுமன்றக் கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது  24 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்.

இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து இதுவரை 36 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இவற்றில் 15 பயணங்கள் நாடளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும்போது சென்ற பயணங்கள்.பிரதமரின் இந்த வெளிநாட்டு பயணங்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.

இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு மக்களின் வரிப்பணம் தான் செலவிடப்படுகிறது. தற்போது, நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த தவிர்க்க முடியாத பயணங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.ஒரு பக்கம், சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, மற்றொரு பக்கம் வெளிநாட்டு பயணங்களுக்காக பல கோடி ரூபாயை வாரி இறைக்கிறது.சர்வதேச நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இதுவரை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால், குறிப்பிடத் தக்க அளவில் பயன் கிடைக்கவில்லை என்பதே, கசப்பான உண்மை. குறிப்பாக, பிரதமரின் பயணங்களால், தூதரக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். இது ஒரு சம்பிரதாய சந்திப்பாகவே இருந்ததே தவிர இதனால், நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்காக, 640 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2009இல், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு பின் இதுவரை 37 முறை (தற்போதைய ரஷ்ய பயணத்தையும் சேர்த்து) பயணம் செய்துள்ளார்.

நாடளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போது அவற்றை புறக்கணித்து விட்டு இதுவரை  24 முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு முன், பிரதமராக இருந்த வாஜ்பாயின் ஐந்தாண்டு பதவிக் காலத்தில் வெளிநாட்டு பயணங்களுக்காக 185 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

குஜராத் கலவரத்துக்கு பின்,  கூட்டத் தொடர் துவங்கியபோது ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாடுக்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், தனக்கு பதிலாக யஷ்வந்த் சின்-காவை அனுப்பி வைத்த வாஜ்பாய், நாடளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றார்.

நேரு, இந்திரா, வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர்களாக இருந்தபோது, நாடளுமன்றக் கூட்டத் தொடர் நடந்தால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதில்லை என்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய பிரதமர் இதற்கு நேர் மாறாக இருக்கிறார். நாடளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து வெளிநாடுகளுக்கு ஓடுகிறார் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

இதற்கு ரவி சங்கர் பிரசாத், முடிச்சு போடாதீங்க!நாடளுமன்றக் கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு பிரதமர் வெளிநாடு செல்வதாக கூறுவது தவறு. பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பே திட்டம் இடப்பட்டவை. எனவே, அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் நாடளுமன்றக் கூட்டத் தொடர் நடப்பதற்கும் முடிச்சு போடக் கூடாது.