Home உலகம் மெக்சிகோவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி: 100 பேர் காயம்!

மெக்சிகோவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி: 100 பேர் காயம்!

524
0
SHARE
Ad

628x471

மெக்சிகோசிட்டி, அக் 25 – மெக்சிகோவில் உள்ள கியூபாட் ஜியூராஸ் தொழிற்பேட்டையில் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த ஒரு ராட்சத பாய்லர் திடீரென வெடித்தது. அதில் அந்த தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கு தீயும் பிடித்தது.

#TamilSchoolmychoice

அதில் ஒருவர் உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

அவர்களில் ஏராளமானவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலரை காணவில்லை. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.