அக் 31- தீவிரவாதத்திற்கு எதிராக மிதவாத அணுகுமுறை மேற்கொள்ளும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் புகழ்ந்துரைத்தார்.
2010-ல் டத்தோ ஸ்ரீ நஜிப், “உலகின் பெரிய சமயங்களில் தலைவர்களும் உறுப்பினர்களும் தங்களின் சொந்த தீவிரவாதிகளைக் கண்டித்து நிராகரித்துவிட்டு உலக மிதவாதிகள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
மேலும், உலக மிதவாதிகள் இயக்கத்தில் அறநிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறநிறுவனம் தீவிரவாதத்தை எதிர்த்து செயல்படுவதில் மிதவாதச் சிந்தனை தகவல்களைப் பரப்பும் முதல் நடுவாக செயல்பட வேண்டுமென்றும் தெரிவித்தார். நஜிப்பின் தீவிரவாதத்திற்கு எதிரான இந்த மிதமான அணுகுமுறையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரம் பாராட்டினார்.
இதனிடையே கேமரன், பிரிட்டனுக்கு வர்த்தகம் செய்வதில் உறுதிப்பாடு கொண்டுள்ள நஜிப், கோடிக்கணக்கான பவுண்ட் முதலீடு செய்து இங்கும் கோலாலம்பூரிலும் நூற்றுக்கணக்கான வேலைகளை உருவாக்கியிருப்பதைப் பாராட்டினார்.
கேமரை தவிர 16 அரசாங்க, மற்றும் தேசத் தலைவர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.இஸ்லாமிய நாடுகளுக்கு வெளியே முதன்முறையாக நடக்கும் இந்தக் கருத்தரங்கு உலக இஸ்லாமிய பொருளாதாரக் கருத்தரங்கின் வரலாற்றில் மிகப் பெரிய கூட்டமாக அமைகிறது.
பிரிட்டனுக்கும் மலேசியாவிற்குமிடையே வர்த்தகத்தை 2016 வாக்கில் 800 கோடி பவுண்டுக்கு அதிகரிப்பது குறித்து இன்று டவுனிங் தெரு 10-ஆம் எண் இல்லத்தில் நஜிப் கேமரனுடன் ஒரு மணி நேர பேச்சு நடத்தவுள்ளார்.