Home அரசியல் கர்பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஸ் வலியுறுத்தல்

கர்பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஸ் வலியுறுத்தல்

732
0
SHARE
Ad

Datuk-Tuan-Ibrahim-Tuan-Manகோலாலம்பூர், நவ 6 – மதம், இனம் சார்ந்த அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறிய கருத்திற்கு பாஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதோடு கர்பால் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜசெக கட்சியிடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துவான் இப்ராகிம் துவான் மன் கூறுகையில், “கர்பால் சிங்கின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்பதோடு, இத்தனை ஆண்டுகள் ஒரு இஸ்லாமிய கட்சியாக நாங்கள் நல்லிணக்கத்தை வலியுறுத்திப் போராடி வந்ததையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.” என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், கிளந்தானில் 23 வருடங்களுக்கும் மேலும், திரங்காணுவில் 1999 ஆம் ஆண்டும், கெடாவில் 2008 ஆம் ஆண்டும் பாஸ் ஆட்சி செய்தது. ஆனால் அப்போது இஸ்லாம் மக்களுக்கும், இஸ்லாம் அல்லாதோருக்கும் ஏதாவது வேறுபாடு இருந்ததா ? இஸ்லாம் அல்லாதோர் ஒதுக்கப்பட்டார்களா? என்றும் துவான் இப்ராகிம் கேள்வி எழுப்பினார்.

எதிர்கட்சிகளின் மீது தற்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும் இந்த நேரத்தில், கர்பால் சிங் வெளியிட்ட இந்தக் கருத்து பாஸ் மற்றும், பிகேஆர் கட்சிகளை காயப்படுத்தும் என்பதோடு நல்லுறவையும் பாதிக்கும் என்றும் துவான் தெரிவித்தார்.

“இது போன்ற அறிக்கைகள் பொதுவாக ஜசெக வைக் காயப்படுத்துவது போன்றது. எனவே பாஸ் கட்சி இந்த விவகாரத்தை ஜசெக விடம் ஒப்படைக்கிறது. கர்பாலின் கருத்துக்கு உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று துவான் கூறினார்.

வழக்கறிஞர் மன்றம் என்ற குடையின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டு வரும் போது, இஸ்லாம் வழக்கறிஞர் மன்றம் (Muslim Lawyers Association) என்ற தனி அமைப்பிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கர்பால் சிங் நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.