புதுடெல்லி, நவ 7- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-கமீலா பார்க்கர் தம்பதியர் இந்தியாவில் 9 நாள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை 4.15 மணிக்கு வந்து இறங்கினர்.
அவர்களை விமான நிலையத்தில் மாநில முதல்-மந்திரி விஜய் பகுகுணா, டி.ஜி.பி. பி.எஸ்.சித்து மற்றும் உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து இளவரசர் சார்லஸ்-கமீலா தம்பதியர் கார் மூலமாக ரிஷிகேசுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு கடந்த ஜூன் மாதம் பெய்த பேய் மழையில், நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பரமார்த்த நிகேதனில் நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரிஷிகேஷ் அருகில் உள்ள நரேந்திர நகர் தங்கும் விடுதியில் இளவரசர் தம்பதியர் இரவில் தங்கினார்கள்.
இன்று (வியாழக்கிழமை) டேராடூனில் இந்திய ராணுவ பயிற்சி மையம், வன ஆராய்ச்சி நிறுவனம், டூன் பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளில் இளவரசர் தம்பதியர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இளவரசர் தம்பதியர் மீண்டும் நரேந்திரநகர் தங்கும் விடுதிக்கு திரும்புகிறார்கள். அங்கு அவர்களை கவுரவித்து முதல்-மந்திரி விஜய் பகுகுணா இரவு விருந்து அளிக்கிறார்.
திருமணமாகி தம்பதியர் என்ற வகையில் சார்லஸ்-கமீலா தம்பதியர் இந்தியாவில் நீண்டதொரு சுற்றுப்பயணம் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
இளவரசர் தம்பதியரின் வருகையையொட்டி டேராடூன், ரிஷிகேஷ் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளும், ஏராளமான துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தியா வந்தனர்
புதுடெல்லி, நவ.7- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-கமீலா பார்க்கர் தம்பதியர் இந்தியாவில் 9 நாள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமான நிலையத்தில் நேற்று மாலை 4.15 மணிக்கு வந்து இறங்கினர்.