ஜெருசலேம், நவ 7- இஸ்ரேல் நாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்தவர் ஆவிக்டர் லைபர்மேன். இவர் லஞ்சம் பெற்று, இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவருக்கு தூதர் பதவி பெற்றுத் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
லைபர்மேன் மீதான ஊழல் வழக்கை ஜெருசலேம் கோர்ட்டு விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி விடுதலை செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.
இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின், லைபர்மேனுக்காக வெளியுறவுத்துறை மந்திரி பதவியை காலியாக வைத்துள்ளார். எனவே மீண்டும் லைபர்மேன் மந்திரியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.