Home அரசியல் உங்கள் குறைகளை முதலில் சரி செய்யுங்கள் – கர்பாலுக்கு மசீச பதிலடி

உங்கள் குறைகளை முதலில் சரி செய்யுங்கள் – கர்பாலுக்கு மசீச பதிலடி

631
0
SHARE
Ad

lohsengkok1கோலாலம்பூர், நவ 7 – மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்டும் முன் ஜசெக தலைவரான கர்பால் சிங் தனது கட்சியிலுள்ள குறைகளை முதலில் சரி செய்ய வேண்டும் என்று மசீச மத்திய செயலவை உறுப்பினர் லோ செங் கோக் (படம்) கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் இத்தனை அனுபவம் வாய்ந்தவரான கர்பால் சிங், உண்மை நிலை என்னவென்று இன்னும் அறியாதிருக்கிறார் என்றும், ஜசெக கட்சியில் அவர் ஏன் கூடுதலாக மலாய் இனத்தவர்களை சேர்க்கவில்லை என்றும் லோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்பால் சிங் கூறுவது போல் இனம், மதம் அடிப்படையிலான அமைப்புகளையும், சங்கங்களையும், கட்சிகளையும் பதிவு ரத்து செய்வதாக இருந்தால், ஒவ்வொரு இனத்தின் தாய்மொழிக் கல்வி தொடர்பான அமைப்புகளும், பல்வேறு முக்கியமான சங்கங்களும் பதிவு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று லோ குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய நல்லிணக்கத்திற்கு இன அடிப்படையிலான சங்கங்களோ, அமைப்புகளோ, கட்சிகளோ பங்கம் விளைவிக்காது என்று கூறிய லோ, அதிலுள்ள தலைவர்களும், உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருப்பது தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

தான் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு உண்மையாக இருப்பதாகவும், குடிமக்கள் அனைவரையும் இனம், மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து ஒன்றாக இணைப்பது தான் அதன் நோக்கம் என்றும் லோ கூறியுள்ளார்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் நல்லிணக்கத்திற்காக போராடி வருபவர்களை மட்டும் கர்பால் காயப்படுத்தவில்லை, தொடர்ந்து நல்லிணக்கத்திற்காகப் போராடி வரும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் முயற்சிகளையும், வெற்றிகளையும் மறுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும் லோ கூறியுள்ளார்.

மதம், இனம் சார்ந்த அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று ஜசெக தலைவர் கர்பால் சிங் அண்மையில் விடுத்த அறிக்கைக்கு பக்காத்தானின் கூட்டணிக் கட்சியான பாஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.