Home நாடு ஆலயத்தை மீண்டும் கட்டித்தரவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் – டி.மோகன் அறிவிப்பு

ஆலயத்தை மீண்டும் கட்டித்தரவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் – டி.மோகன் அறிவிப்பு

579
0
SHARE
Ad

sri munis 400 x 300கோலாலம்பூர், நவ 12 – கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினரால் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜாலான் பி.ரம்லி ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்றும், இல்லையே புத்ரா ஜெயாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி. மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்த ஆலையத்தை மீண்டும் கட்டுவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் மாநகர மன்றம் ஏற்க வேண்டும் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஆலயம் கட்டுவதற்கான பணி தொடங்கப்படவில்லை என்றால், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னானுக்கு எதிராக புத்ரா ஜெயாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மோகன் நேற்று அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, ஜாலான் பி.ரம்லி முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தை உடைத்தவர்களுக்கு ஸ்ரீ முனீஸ்வரர் மிக விரைவில் பாடம் புகட்டுவார் என்று மோகன் கூறியதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.