Home நாடு பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை

682
0
SHARE
Ad

Sri_Muneeswarar_Kaliamman_Temple_1011கோலாலம்பூர், நவ 11 – தலைநகரிலுள்ள ஜாலான் பி.ரம்லியில் அமைந்திருக்கும் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியை நேற்று கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் இடித்துத் தள்ளினர்.

இது குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் ஆலத்திற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், ஆலயத்தின் ஒரு பகுதியிலுள்ள கடைகளை மட்டுமே இடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு இவ்விவகாரம் குறித்த அனைத்து அறிக்கைகளும் வந்து சேர்ந்தன. ஆலயத்தின் ஒரு பகுதியிலுள்ள கடைகள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. ஆலயம் அப்படியே தான் இருக்கிறது” என்று கோலாலம்பூரில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பழனிவேல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அமலாக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆலயத்தின் தடுப்புச் சுவர் அதன் அதிகாரப்பூர்வ எல்லையிலிருந்து சற்று கூடுதலாக உள்ளதாகவும், எனவே அந்தப் பகுதி மட்டும் இடிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதம் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) ஆலயத்தின் ஒரு பகுதியை இடிக்க முற்பட்ட போது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், ஆலய நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அரசாங்கம் இடிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், நேற்று காலை மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் திடீரென அங்கு வந்து ஆலயத்தின் ஒரு பகுதியை இடித்துத் தள்ளி தங்கள் பணியை நிறைவு செய்தனர்.

ஆனால், ஆலயத்தை சற்று கூடுதலாகவே உடைத்து, அதன் வடிவமைப்புக் கெடுத்து விட்டதாக ஆலய நிர்வாகம் தற்போது மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.