Home நாடு முனீஸ்வரர் ஆலய மறுசீரமைப்புப் பணி தொடக்கம்!

முனீஸ்வரர் ஆலய மறுசீரமைப்புப் பணி தொடக்கம்!

638
0
SHARE
Ad

sri-muniswarar-kaliamman-tpl-jln-p-ramlee-260712-27கோலாலம்பூர், நவ 14 – ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாக தற்போது அந்த ஆலய வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நேற்று ‘ஹப் செங்’ நிறுவனம் உடைக்கப்பட்ட கோயில் வளாகத்தில் சீரமைப்பு பணிகளைத் தொடங்கியது. இரண்டு ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு காலை 8 மணிக்கு அங்கு வேலை தொடங்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர மன்றத்தினர் சுமார் 20 பேரின் மேற்பார்வையில், மேம்பாட்டு அதிகாரிகளும் கட்டிட வரைபடத்தோடு பணிகளைத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

இரண்டு வாகனங்களில் வந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர மன்றத்தினரால் முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பல இந்திய அமைப்புகளும், அரசு சாரா இயக்கங்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

உடைக்கப்பட்ட ஆலயம் ஒரு வாரத்திற்குள் மறுசீரமைப்பு செய்து தரவில்லை என்றால் பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.