Home கலை உலகம் சிம்புவை காதலிக்க நான் முட்டாளா ? நடிகை ஆண்ட்ரியா

சிம்புவை காதலிக்க நான் முட்டாளா ? நடிகை ஆண்ட்ரியா

693
0
SHARE
Ad

andrea simbu 298-295

சென்னை, நவம்பர் 12- கடந்த இரண்டு நாட்களாக சிம்புவும் ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக இணையதளங்களில் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. இதை சிம்புவும் மறுக்கவில்லை. இந்நிலையில் ஆண்ட்ரியா இந்த செய்தியை கண்டு தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இந்த வதந்தியில் சிறிதும் உண்மையில்லை என்றும் தன்னுடைய மேலாளரை வைத்து அறிக்கை விடவைத்தார்.

ஆனாலும் இந்த வதந்தி பரவிக்கொண்டே இருப்பதால் இன்று ஒரு காட்டமான அறிக்கையை விட்டிருக்கின்றார் ஆண்ட்ரியா.

#TamilSchoolmychoice

சிம்பு ஒரு காதல் மன்னன் என்று உலகிற்கே தெரியும். அப்படியிருக்கும்போது அவரை காதலிப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. சிம்புவின் காதல் அதிகபட்சமாக ஒருவருடம் கூட நீடிக்காது. இது எல்லோருக்கும் தெரியும். காதலை புனிதமாக மதிக்கும் நான், சிம்புவுடன் காதல் என்பதை நினைத்துப்பார்க்க கூட அருவறுப்பாக உள்ளது.

எனவே ஊடகங்கள் தயவுசெய்து சிம்புவுடன் காதல் என்னும் வதந்தியை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். மீறி இந்த வதந்தியை தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றை தயார் செய்து தன்னுடைய மேலாளரிடம் கொடுத்து ஊடகங்களுக்கு கொடுக்க சொல்லியிருக்கின்றார்.