நவம்பர் 12- பன்னாட்டளவில் அதிக எண்ணிக்கையில் கைத்தொலைப்பேசிகளைத் தயாரித்து விற்பனை செய்வதில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் சாம்சங் நிறுவனம், இந்த இடத்தினைத் தக்க வைப்பதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
நாளொன்றுக்கு பத்து லட்சம் கைத்தொலைப்பேசிகள் மற்றும் பிற இலக்கமுறை சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது சாம்சங். இது தொடர வேண்டும் என்பதற்காகவே, ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் அளவில் முதலீடு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
Comments