Home வாழ் நலம் நகங்கள் வலுவிழப்பதை தவிர்க்க வழிகள்

நகங்கள் வலுவிழப்பதை தவிர்க்க வழிகள்

575
0
SHARE
Ad

nail 300-200

நவம்பர் 13- உங்களில் எத்தனை பேருக்கு கையில் நகங்கள் அடிக்கடி உடைகிறது? கண்டிப்பாக பலர் இந்த பிரச்சனைக்கு ஆளாகி இருப்பீர்கள். இன்னும் சிலருக்கு நகங்கள் வலுவிழந்து மெதுவாக பிளவடையும்.

நகங்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர :

#TamilSchoolmychoice

• நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். இதனால், நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும். இதுபோன்ற செயல்களை தவிர்ப்பதன் வழி நகத்தை வலுவடைய செய்யலாம்.

• வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாதுகாக்கலாம்.

• நகத்தை தொடர்ந்து தண்ணீரில் வைத்திருந்தால், அது தண்ணீரில் ஊறி போய், வலுவிழந்து, சுலபமாக கையோடு பிய்த்துக் கொண்டு வந்துவிடும். ஏனெனில் நகங்களில் சிறு துளைகள் இருப்பதால், அது தண்ணீரை உள்வாங்கும். அதனால் குளித்து முடித்த பின்னரோ அல்லது கைகளைக் கழுவிய பின்னரோ நகங்களை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.

• நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்து கொள்வது அவசியம்.

• நச்சுத்தன்மையுள்ள நெயில் பூச்சிகளில் (பாலிஷ்களில்) ஃபார்மால்டிஹைடு, ஃபார்மால்டிஹைடு ரெசின் மற்றும் டொலுவீன் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவ்வகை நெயில் பூச்சுகளை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.

• நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத்தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவி புரியும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக்கும்.