Home இந்தியா ராகுல் காந்தி பதில் குறித்து தேர்தல் ஆணையம் அதிருப்தி

ராகுல் காந்தி பதில் குறித்து தேர்தல் ஆணையம் அதிருப்தி

897
0
SHARE
Ad

INDIA-ELECTION/

புதுடெல்லி, நவம்பர் 14- சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த விளக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  முசாபர்நகர் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சந்தித்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகவும் இதை உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், மதகலவர தீயை பா.ஜ.க வளர்த்து வருவதாகவும் கூறினார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ. புகார் செய்தது.தனது பேச்சு நியாயமானதுதான் என்றும் பா.ஜ.வின் கொள்கைகளையும் திட்டங்களையுமே விமர்சித்ததாக ராகுல் விளக்கம் அளித்தார்.இதை ஆராய்ந்த தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராகுலின் பேச்சு குறித்த புகார், சூழல்கள், அவரது விளக்கம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் அவரது விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும் எதிர்காலத்தில்  விழிப்புணர்வோடு பேச வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.