Home உலகம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூன் வாகனம் முற்றுகை

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூன் வாகனம் முற்றுகை

514
0
SHARE
Ad

david camron 300-200யாழ்ப்பாணம், நவ 16- இலங்கை தமிழர் பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேமரூன் பயணித்த வாகனத்தை மறித்த தமிழர்கள் இலங்கை போரின் போது மாயமான உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். முன்னதாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை கேமரூன் சந்தித்து பேசினார். இறுதிப் போரின் போது தாக்குதலுக்குள்ளான இடங்களையும் கேமரூன் பார்வையிட்டார். போர்க்குற்றம் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் பிரச்சனை எழுப்பப்படும் என கேமரூன் கூறியிருந்த நிலையில் தமிழர் பகுதியில் அவர் பயணம் மேற்கொண்டிருப்பது இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது