அதன்படி, “தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சிங்கப்பூரைப் பின்பற்றினால் தற்போது புத்ரஜெயா விமானங்களுக்கு செய்யும் செலவை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டியது வரும்” என்று சாஹிடன் தெரிவித்தார்.
அண்மையில், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியான் லூங் வெளிநாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வர்த்தக விமானத்தில் சென்றதாக பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தனர்.
அவரைப் போல் நஜிப் துன் ரசாக்கும் தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு வர்த்தக விமானங்களை ஏன் பயன்படுத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
அது குறித்துக் கருத்துரைத்த சாஹிடன், “சிங்கப்பூர் பிரதமர் வர்த்தக விமானத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தனர். ஆனால் அது உண்மை இல்லை. அவரது விமானம் தனியுரிமை பெற்றது அதை வர்த்தக விமானமாகப் பயன்படுத்த முடியாது. இது போன்ற விமானங்களுக்கு ஆகும் செலவு தற்போது புத்ரஜெயா பயணங்களுக்கு செய்யும் செலவைக் காட்டிலும் அதிகம்” என்று தெரிவித்தார்.