இன்று நாடாளுமன்றத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுகீட்டு விவாதத்தின் போது, “ரோஸ்மாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தனிப்பட்ட முறையிலானது. அரசாங்கம் சார்பானது அல்ல” என்ற உண்மையைப் போட்டுடைத்தார்.
மேலும், தனி ஜெட் விமானத்தைப் பயன்படுத்த ரோஸ்மாவிற்கு அனுமதி வழங்கியது துணைப் பிரதமர் முகைதீன் யாசின் என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லை என்றும் அஸலினா ஓத்மான் தெரிவித்தார்.
ரோஸ்மாவின் கத்தார் பயணம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த பிரதமர் துறை அமைச்சர் சாஹிடன் காசிம், நாட்டைப் பிரதிநிதித்து தான் ரோஸ்மா கத்தார் பயணம் மேற்கொண்டதாகவும், அதனால் நாட்டிற்கு நன்மை தான் விளையும் என்றும் தெரிவித்தார்.