Home இந்தியா உத்தரபிரதேசத்தில் 30 வேட்பாளர்களை ராகுல் தேர்வு செய்தார்

உத்தரபிரதேசத்தில் 30 வேட்பாளர்களை ராகுல் தேர்வு செய்தார்

417
0
SHARE
Ad

INDIA-ELECTION/

லக்னோ, நவ  21– பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் தயாராகி வருகிறது.

வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொறுப்பை ராகுலிடம் சோனியா ஒப்படைத்துள்ளார். இதையடுத்து 534 தொகுதிகளிலும் யார், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று சில மாதங்களுக்கு முன்பே ராகுல் ஒரு பட்டியல் தயாரித்தார்.

#TamilSchoolmychoice

அந்த பட்டியலின் அடிப்படையில் மாநிலம் வாரியாக தற்போது ராகுல் வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்தார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ராகுல் வேட்பாளர்களை இறுதி செய்தார். இவர்களில் 13 பேர் கடந்த 2009–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களாவார்கள்.

இவர்கள் 13 பேரும் கடந்த தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வாங்கியவர்கள். அதை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.