இன்று அங்கசாபூரியிலுள்ள ஆர்டிஎம் 2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது 11 ஆண்டு கால ஓய்வு குறித்து பேசிய மகாதீர், “கடந்த 1981 ஆம் ஆண்டு, முந்தைய பிரதமர் பயன்படுத்திய போயிங் 737 ரக விமானம் இருந்தது. அவருக்கு சில பிரச்சனைகள் இருந்ததால் அத்தனை பெரிய விமானத்தைப் பயன்படுத்தினார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.”
“சில காலம் அந்த விமானத்தை பயன்படுத்திவிட்டு, அதன் விலை என்னவென்று விசாரித்தேன். வருடத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம் வழங்குவதாகக் கேள்விப்பட்டவுடன், அதை விற்று சிறிய வகை விமானம் வாங்க உத்தரவிட்டேன். இதனால் செலவு குறைந்தது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில், அரசாங்கம் சொந்தமாக வைத்திருக்கும் 5 விமானங்களுக்கு எண்ணெய் செலவாக 14.95 மில்லியனும், பராமரிப்பிற்காக 160.08 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசிம் தெரிவித்தார்.
நஜிப் விமானங்களுக்காக அதிக செலவு செய்கிறாரா? என்று மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,
“எனது ஆட்சிக் காலத்தை விட அரசாங்கம் இப்போது செழிப்புடன் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.