Home உலகம் பூமிக்கு அருகே சுற்றிவரும் ஆபத்தான விண்பாறை

பூமிக்கு அருகே சுற்றிவரும் ஆபத்தான விண்பாறை

487
0
SHARE
Ad

vinparai

வாஷிங்டன்: அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பூமிக்கு அருகே சுற்றி வரும் மிகவும் ஆபத்தான விண்பாறை ஒன்றை கண்டறிந்துள்ளது.

விண்வெளி குறித்து ஆராய்வதற்காக  “நியோவைஸ்” என்ற செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பபட்டது. இந்த செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அரிய புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பி வருகிறது.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் மாதம் நியோவைஸ் அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பூமியில் இருந்து 43 மில்லியன் மைல் தூரத்தில் அபாயகரமான விண்பாறை ஒன்று சுற்றி வருவது கண்டறியபட்டது.

இந்த விண்பாறை நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்துசெல்வதை விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளியை படம் பிடிக்கும் தொலைத்தூர கருவியின் மூலம் இந்த விண்பாறை சுற்றுவது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விண்பாறை 2013 ஒய்.பி. 139 என்று அழைக்கப்படுகிறது.

இது 650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கிறது . இதன் வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் அறிஞர்கள் சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ளனர்