Home உலகம் பிணமான ஒருமாத குழந்தை புதைக்கும் போது உயிர் பிழைத்த அதிசயம்

பிணமான ஒருமாத குழந்தை புதைக்கும் போது உயிர் பிழைத்த அதிசயம்

577
0
SHARE
Ad

634d665a-a553-44bb-b397-026465bd3c87_S_secvpf

பீஜிங், நவ 21- கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிறக்கும் போதே சுவாசக் கோளாறுடன் இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். கடந்த 12ம் தேதி குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால் அதை காப்பாற்ற வெகு நேரம் போராடிய மருத்துவர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்து, இறப்பு சான்றிதழும் வழங்கி அக்குழந்தையை வீட்டுக்கு அனுப்பினர்.

#TamilSchoolmychoice

சோகத்தில் மூழ்கிப்போன பெற்றோர் அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தபோது உடலில் சிறு அசைவு ஏற்பட்டதை உறவினர் ஒருவர் கவனித்தார்.

இதனையடுத்து, அவசர அவசரமாக அன்ஹுய் மாகாண அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு பெற்றோர் தூக்கிக்கொண்டு ஓடினர்.

உடனடியாக, உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. உயிருடன் உள்ள குழந்தை இறந்து விட்டதாக சான்றிதழ் தந்த மருத்துவர் மற்றும் தாதியர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதை குழிக்கு போகும் வழியில் உயிர் பிழைத்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.