Home உலகம் அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியது

அமெரிக்கா- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியது

516
0
SHARE
Ad

b2d54899-7bb3-4848-b0af-5ceffa054b50_S_secvpf

காபூல், நவம்பர் 21 – ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராட அரசுக்கு உதவி செய்யும் நோக்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் அமெரிக்க கூட்டுறவுடனான நேட்டோ படைகள் அங்கு நிலை நிறுத்தப்பட்டன. தற்போது, 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் வரும் 2014 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நேட்டோ படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக ஐ.நா அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ஆப்கான் நாட்டிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு பாதுகாப்பு பொறுப்புகளும் அந்நாட்டு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. தலிபான்களின் தாக்குதல்களும் அதிகரித்துள்ள வேளையில் சர்வதேசப் படைகளும் விலகிக்கொள்ளும்போது நாட்டின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்ய இன்று தலைநகர் காபுலில் மக்கள் கூட்டம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அங்கு நீடித்திருப்பது பற்றி இன்று விவாதிக்கப்பட அரசு முடிவு செய்திருந்தது.  இந்த நிலையில் நேற்று அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களின் இடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஒரு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 12 வருட கால ராணுவ ஒத்துழைப்புகளில் அமெரிக்க ராணுவப்படையினரின் மீதான தவறுகள் குறித்தும், ஆப்கான் ராணுவவீரர்கள் இறக்கநேரிட்டது குறித்தும் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கின்றது.

அந்நாட்டின் மூத்தவர்கள் குழுவான லோயா ஜிர்காவிடம் அமெரிக்க அரசு மன்னிப்புக் கடிதம் ஒன்றை அளிக்கவேண்டும் என்று ஆப்கான் அரசு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த வரைவு லோயா ஜிர்காவிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று தெரிவித்தார்.

ஆயினும் இதில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம் பெறவில்லை என்று குறிப்பிட்ட கெர்ரி ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாய் தங்களிடம் மன்னிப்பு கோரவில்லை என்றும் கூறியுள்ளார்.  அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடமிருந்து லோயா ஜிர்காவிற்கு இந்த வாரம் தகவல் வரும் என்பதை ஆப்கான் அரசும் உறுதி செய்தது.

ஆயினும், ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சூசன் ரைஸ் மன்னிப்பு என்ற வார்த்தை அமெரிக்க அதிபரின் குறிப்பில் இருக்காது என்பதை வலியுறுத்தி உள்ளார்.

இதுமட்டுமின்றி, அந்நாட்டின் பழங்குடி மக்களும், பல அரசியல் பெரியவர்களும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெறுவதற்காக அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தலைநகர் காபூலுக்கு வந்துள்ளனர். இவர்களிடையே இந்த அறிவிப்பு ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.