Home கலை உலகம் சுருதிஹாசனை தாக்கியது அவரது தீவிர ரசிகர்

சுருதிஹாசனை தாக்கியது அவரது தீவிர ரசிகர்

587
0
SHARE
Ad

Shruti-Haas 300-200

சென்னை, நவம்பர் 22- சுருதிஹாசனை தாக்கியது அவரது தீவிர ரசிகர் என தெரிய வந்துள்ளது.

நடிகர் கமலஹாசன்– சரிகா தம்பதியின் மூத்த மகள் சுருதிஹாசன். சென்னையில் தந்தையுடன் வசித்து வந்தார். தமிழில் 7–ம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

மும்பையில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுவந்தார். தற்போது புறநகர்ப்பகுதியான பந்த்ராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வீடு வாங்கி குடியேறினார். அங்கு அவர் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சுருதிஹாசன் வீட்டில் 27 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தான்.

திடீர் என்று சுருதி கழுத்தைப் பிடித்து தாக்கினான். உடனே சுதாரித்துக் கொண்ட சுருதி அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு காவலாளி வந்து விட்டதால் மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான்.

அந்த மர்ம மனிதன் சுருதியின் தீவிர ரசிகர் என்று தெரிய வந்துள்ளது. சுருதியை கடந்த ஒரு வருடமாகவே கண்காணித்து வந்துள்ளார். டுவிட்டர் இணைய தளத்திலும் அடிக்கடி தொடர்பு கொண்டு இருக்கிறான். சுருதியை சந்திக்கும் ஆவலில் படப்பிடிப்பு தளங்களில் சுற்றி வந்தான்.

பிரபுதேவா இயக்கத்தில் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் சுருதி நடித்தபோது ஒரு ரசிகர் சுருதியை நெருங்கியபோது படப்பிடிப்பு குழுவினர் அவனை விரட்டி அனுப்பினர். அவன்தான் நேற்று முன்தினம் வீட்டுக்கு சந்திக்க வந்து இருக்கிறான். ஆனால் அவனை சுருதி இதற்கு முன் பார்த்ததில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுருதி இந்த சம்பவம் பற்றி பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதனை தேடிவருகிறார்கள். சுருதியை சந்திக்கும் ஆவலில் வந்தானா? அல்லது முன் விரோதமா? யாராவது அவனை ஏவி விட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

சுருதி அடுத்ததாக ‘வெல்கம் பேக்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பில் சுருதிக்கு தனியாக மெய்க்காப்பாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுருதி தற்போது தோழி வீட்டில் தங்கி உள்ளார். அதிர்ச்சியில் இருந்து மீண்டதும் வீடு திரும்புகிறார். வீட்டுக்கு தனியாக காவலாளியை நியமித்து பாதுகாப்பு வைக்கவும் முடிவு செய்துள்ளார்.