Home நாடு ஜோகூரில் தனியார் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செயல்படுமா?

ஜோகூரில் தனியார் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செயல்படுமா?

571
0
SHARE
Ad

johorஜோகூர், நவ 25 – ஜோகூரில் அடுத்த ஆண்டிலிருந்து ஞாயிறு முதல் வெள்ளி வரை வேலை நாட்களாக அறிவித்ததை ஜோகூர் மாநில வர்த்தகக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பழைய நிலையிலேயே இருக்கவும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கூட்டமைப்புத் தலைவர் டான் செங் லியாங் கூறுகையில், “கடந்த 1994 ஆம் ஆண்டு வரை ஜோகூர் மாநிலத்தில் வழக்கத்தில் இருந்த வெள்ளி, சனி வார விடுமுறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது.அதே நேரத்தில் 1990 ஆம் ஆண்டில், ஜோகூர் மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களாகவும், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வெள்ளி, சனி விடுமுறை நாட்களாகவும் பின்பற்றி வந்தன. எனவே மீண்டும் அதே முறையை நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்.

மேலும், தொழில் துறைகளை வெள்ளிக்கிழமை தங்கள் பணியாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் கொடுக்கும் படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் டான் செங் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்து ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்தின் கூறுகையில், “வெள்ளிக்கிழமை விடுமுறையா அல்லது வேலை நாளா என்பதை தனியார் நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், அந்நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்க வேண்டுமா என்பதை குறிப்பிடவில்லை.