Home தொழில் நுட்பம் சாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி மெகா 6.3

சாம்சங் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி மெகா 6.3

599
0
SHARE
Ad

download

கோலாலம்பூர், நவம்பர் 25- பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி தொடர்ச்சியாக பல திறன்பேசிகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனம், தற்போது  கேலக்ஸி மெகா 6.3 எனும் புதிய திறன்பேசியினை அறிமுகம் செய்கின்றது.

349 டொலர்கள் பெறுமதியான இத்திறன்பேசியானது 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் ஆண்டிராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் (Android 4.2.2 Jelly Bean) இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் இத்திறன்பேசியில், ஸ்னாப் டராகன் (Snapdragon) 400 செயலி , 8GB சேமிப்புக் கொள்ளளவு, 3,200mAh மின்கலம் , 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1.9 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.