Home 13வது பொதுத் தேர்தல் ம.சீ.ச தேர்தல்: தலைவர் பதவிக்கு கான் பிங் சியூ போட்டி!

ம.சீ.ச தேர்தல்: தலைவர் பதவிக்கு கான் பிங் சியூ போட்டி!

736
0
SHARE
Ad

Gan Ping Sieuகோலாலம்பூர், நவ 26 – வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக ம.சீ.ச உதவித் தலைவர் கான் பிங் சியூ இன்று அறிவித்தார்.

ஏற்கனவே தலைவர் பதவிப் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஓங் தி கியாட் மற்றும் துணைத் தலைவர் லியோ தியாங் லாய் ஆகிய இருவரும் அறிவித்துள்ள நிலையில், அவர்களை எதிர்த்து கான் பிங்கும் களமிறங்குகிறார்.

இன்று ம.சீ.ச தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கான் இந்த அறிவிப்பை விடுத்தார். வரும் டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ம.சீ.ச கட்சியின் ஆண்டுக்கூட்டத்தின் போது கட்சித் தேர்தலும் நடைபெறவுள்ளது.