Home அரசியல் அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பாஸ் தலைவர் கூறுகிறார்

அன்வார் இப்ராஹிம் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பாஸ் தலைவர் கூறுகிறார்

1133
0
SHARE
Ad

Nik-Aziz-slider

கோத்தாபாரு,பிப்.12- பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்று பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் டத்தோஸ்ரீ நிக் அஸிஸ் கூறுகிறார்.

அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் உச்சமன்றம் விரும்பாது என்று வெளியான செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

#TamilSchoolmychoice

அம்மன்றத்திற்கு தான் தலைவராக இருப்பதாகவும், இது  ஒரு பொய்யான தகவல் என்றும், இச்செய்தியால் மக்கள் கூட்டணி தோழமைக் கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் என்றார்.

எங்கள் கூட்டணியின் தலைவராக இருப்பவர் அன்வார். பிரதமர் பதவிக்கு அவர் மிகவும் தகுதியானவர். அவரை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று நிக் அஸிஸ் தெரிவித்தார்.