Home வாழ் நலம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

585
0
SHARE
Ad

992847-exercise

கோலாலம்பூர், நவம்பர் 29- தற்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் தான் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியும்.தினமும் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 30 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitness) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்கியமாக வாழலாம்.