Home வாழ் நலம் தொப்பையை குறைக்க படிக்கட்டை பயன்படுத்துங்கள்!

தொப்பையை குறைக்க படிக்கட்டை பயன்படுத்துங்கள்!

682
0
SHARE
Ad

stair-climbingமார்ச் 2 – மாடிப்படி ஏறி இறங்குவது நல்ல உடற்பயிற்சி என்பது தெரியும். அதன் மூலமே தொப்பையை வெகுவாகக் குறைக்க முடியும்.

மாடிப்படிகள் உயரம்  குறைவாக இருப்பது, உயரம் அதிகமாக இருப்பது… இவற்றில் எதில் நன்மை அதிகம்? இதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

தொப்பையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் எட்மண்ட் ரோல்ஸ் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். ‘‘நாம்  சாப்பிடும் ஆர்வத்தால் கிடைத்ததையெல்லாம் அடிக்கடி சாப்பிட்டு உடலைப் பருக்க வைத்துக்கொள்கிறோம். உடல் எடையைக் குறைக்க  வேண்டுமென்றால், நாம் சாப்பிட விரும்பும் பொருளில் கொஞ்சம் எடுத்து ஐந்து நிமிடம் வரை மென்று கொண்டே இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அல்லது அந்தப் பொருள்களின் வாசனையை முகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற  எண்ணத்தையும் உடல் பருமனையும் வெகுவாகக் குறைத்து விடலாம்’’ என்கிறார் இவர்.

உயரமாக உள்ள மாடிப் படிகளில் ஏறி இறங்குவதுதான் தசைகளைச் செயல்பட வைத்தும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியும் நிறைய ஆக்ஸிஜனை  உடலுக்குத் தருகிறது’’என்கிறார்கள் அவர்கள். ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் எட்டு அங்குல உயரம் வருவது போல மாடிப் படிகள் அமைப்பதுதான்  சிறந்ததாம்.