Home வாழ் நலம் வாழ்க்கையில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

வாழ்க்கையில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

584
0
SHARE
Ad

joggingகோலாலம்பூர், மார்ச்.22- வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சியோ அல்லது ஓட்டப்பயிற்சியோ அல்லதுவேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். முகம்,சருமம்,உடல் அழகுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படும். இளம் வயதில் செய்யபடும் உடற்பயிற்சி மிகுந்த நன்மை பயக்கும்.

#TamilSchoolmychoice

மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும். நீங்கள் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி  செல்வதன் மூலம் உங்கள் கால்களை திடப்படுத்த முடியும்

40 வயதில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ எவ்வளவு உடற்பயிற்சி செய்தீர்களோ அதை பொறுத்துதான் அமைகிறது என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.

40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைப்பயிற்சி அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.