Home வாழ் நலம் பாதங்கள் மென்மையாக மாற

பாதங்கள் மென்மையாக மாற

441
0
SHARE
Ad

barefoot_walking

கோலாலம்பூர், டிசம்பர் 2- உங்கள் பாதங்கள் எப்போதும் வறண்டு போய்க் காணப்படுகின்றன.

ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு மேசைக் கரண்டி  எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் (Dettol)  என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள் முழுமையாக படும்படி  வைத்திருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அப்படியே உங்கள் கால்களை மெதுவாக மசாஜ் செய்யவும். அரைத்த மருதாணி இலை அல்லது மருதாணி பொடியை எடுத்து பாதங்களில் தடவி  அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவும்.

வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென்மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும்.