Home நாடு சிங்கப்பூர் கலவரம்: மேலும் 8 இந்தியர்கள் கைது! விசாரணை தீவிரம்!

சிங்கப்பூர் கலவரம்: மேலும் 8 இந்தியர்கள் கைது! விசாரணை தீவிரம்!

617
0
SHARE
Ad

1-arrest (1)சிங்கப்பூர், டிச 11 – லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பாக நேற்று மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதோடு, தீவு முழுவதும் 10 க்கும் மேற்றபட்ட தங்குமிடங்களில் வாழும் 3,700 அந்நியத் தொழிலாளர்களிடமும் சிங்கப்பூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவைச் சேர்ந்த அந்த 8 பேரும் 22 முதல் 38 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. அதில் 3 பேர் நேற்று மதியம் 2.30 மணியளவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

மேலும், கலவரத்தில் தொடர்புடையர்கள் கைது செய்யப்படலாம் என்று நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறை தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, கைது செய்யப்பட்ட இந்திய நாட்டைச் சேர்ந்த 24 பேர், நேற்று மதியம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.