Home கலை உலகம் “இணையத்தளங்களில் படங்களை வெளியிடும் நிலை உருவாகலாம்” – சேரன் எச்சரிக்கை

“இணையத்தளங்களில் படங்களை வெளியிடும் நிலை உருவாகலாம்” – சேரன் எச்சரிக்கை

511
0
SHARE
Ad

cheran

சென்னை, டிச 11 – சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி, சரத்குமார், அமலா பால், நாசர், பரோட்டா சூரி நடிப்பில் புதிதாக வெளிவரவிருக்கும் படம் ‘நிமிர்ந்து நில்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ராஜன் கூறுகையில், புதிதாக வெளிவரும் படங்கள் அனைத்தும் சில இணையத்தளங்களில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் வெளியிடப்படுகிறது. இதற்கு சினிமாத்துறையில் இருப்பவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சேரன், “புதிய படங்கள் டிவிடி க்களாகவும், இணைத்தளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதற்கு எதிராக ராஜன் இன்று வரை குரல் கொடுத்து வருகிறார். சினிமாத்துறையில் உள்ளவர்கள் அது குறித்து ‘நிமிர்ந்து நின்று’ குரல் கொடுக்க மறுக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.

இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தனது படங்களை இணையத்தளங்களிலும் மற்றும் பிற சமூக வலைத்தளங்களிலும் வெளியிட வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.