Home கலை உலகம் விஜயகாந்த் மகன் கதாநாயகனாக அறிமுகம்

விஜயகாந்த் மகன் கதாநாயகனாக அறிமுகம்

552
0
SHARE
Ad

vijaykant

சென்னை, டிசம்பர் 13- விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை சந்தோஷ்குமார் ராஜன் இயக்குகிறார். இரு வருடங்களாக நடிப்பு பயிற்சி, நடனம், சண்டை பயிற்சிகள் பெற்ற சண்முகபாண்டியன், இப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவக்க விழா பூஜை சாலி கிராமத்தில் நேற்று காலை நடந்தது.

இதில் விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர்கள் பிரபு, சத்யராஜ், கார்த்தி, நந்தா, மயில்சாமி, விக்ரம் பிரபு, இளவரசு, கருணாஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

#TamilSchoolmychoice

திரைப்பட இயக்குநர்களான எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.எஸ். ரவிக்குமார், பூபதிபாண்டியன், தயாரிப்பாளர்கள் முரளிதரன், சாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தே.மு.தி.க.எம்.எல்.ஏ. அனகை முருகேசன், மாவட்ட செயலாளர்கள் வி.யுவராஜ், வி.என். ராஜன், ஏ.எம். காமராஜ், க.செந்தாமரை கண்ணன், மற்றும் கே.எஸ். மலர்மன்னன், எஸ்.யு.சந்திரன், சவுந்திரபாண்டியன், த.பாண்டியன், கண்ணதாசன், உள்பட பலரும் கலந்து கொண்டனர்.