Home இந்தியா சட்டீஸ்கர் முதல்வராக ராமன் சிங் பதவியேற்றார்

சட்டீஸ்கர் முதல்வராக ராமன் சிங் பதவியேற்றார்

622
0
SHARE
Ad

Tamil-Daily-News_29294550419

ராய்ப்பூர், டிசம்பர் 13 – சட்டீஸ்கர் முதல்வராக ராமன்சிங்  பதவி ஏற்றார். மாநில கவர்னர் சேகர்தத் அவருக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது. பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக ராமன்சிங் கடந்த செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் சேகர் தத் அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ராமன்சிங் முதல்வர் பதவியேற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அவருக்கு கவர்னர் சேகர் தத் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ராய்ப்பூர் காவல்துறை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மாசுவராஜ், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

3 வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள ராமன்சிங் ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.