Home தொழில் நுட்பம் மிக குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி டேப் 3!

மிக குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி டேப் 3!

989
0
SHARE
Ad

GalaxyTab3-10-01கோலாலம்பூர், டிசம்பர் 16 – சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான 7 அங்குல அளவுடைய கேலக்ஸி டேப் 3 (Galaxy Tab 3) என்ற கையடக்கக் கணினி ஆனது தற்போது குறைந்த விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு 8ஜிபி சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட இந்த  கையடக்கக் கணினி குறைந்த விலையில் வாங்கக்கூடிய வாய்ப்பினை அமேசான் தளம் வழங்குகின்றது.

இந்த   கையடக்கக் கணினி ஆனது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல செயலி மற்றும் பிரதான நினைவகமாக 1 ஜிபி ரேம் (RAM) ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் (Android 4.1 Jelly Bean) இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனத்தில் 3.15 மெகா பிக்சல்களை உடைய பிரதான கேமெரா மற்றும் 1.3 மெகா பிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கேமெரா ஆகியவனவும் காணப்படுகின்றன.