Home தொழில் நுட்பம் பேஸ்புக்கிலும் இனி வீடியோ விளம்பரங்கள் செய்யலாம்!

பேஸ்புக்கிலும் இனி வீடியோ விளம்பரங்கள் செய்யலாம்!

547
0
SHARE
Ad

facebookடிசம்பர் 17 – மக்களிடத்தில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் புதிதாக காணொளி (வீடியோ) விளம்பரங்களை இவ்வார இறுதியில் தனது தளத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த விளம்பரங்கள் தன்னிச்சையாக பேஸ்புக் பயனர்களின் முகப்பில் (News feeds) ஒளிபரப்பப்படும் என்றும், இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்திற்கு வருடத்திற்கு சுமார் 66.4 பில்லியன் அமெரிக்க டாலர்  (215.2 பில்லியன் ரிங்கிட்) தொகை, அமெரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஈடாக கிடைக்கும் என்றும் வால் ஸ்டீரிட் ஜர்னல்  (Wall Street Journal)  பத்திரிக்கை கூறுகிறது.

லயன் கேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பேஸ்புக்கிற்காகவே சிறப்பாக தயாரித்த  ‘டிவெர்ஜெண்ட்’ (Divergent) என்ற குறுவிளம்பர படம் தான் பேஸ்புக்கின் முதல் விளம்பரம் என்றும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice