Home நாடு கூந்தலுக்கு நலம் தரும் தேங்காய் பால்

கூந்தலுக்கு நலம் தரும் தேங்காய் பால்

608
0
SHARE
Ad

hair-growth.-Coconut-milk1

கோலாலம்பூர், டிசம்பர் 18- அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு வீட்டிலுருந்தே சில சிகிச்சைகளை கையாளலாம்.  கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது.

தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதாரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

கூந்தல் பராமரிப்பிற்கு தேங்காய் பாலை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.  தேங்காய் பாலில் புரதச் சத்தும் கொழுப்புகளும் வளமையாக உள்ளது. மேலும் அதில் மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. தேங்காய் பாலில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. கூந்தல் வளர்ச்சி அதில் ஒன்றாக விளங்குகிறது.

தேங்காய் பாலின் நன்மைகள் மேலோங்கி நிற்பதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களே. இது தலைமுடி உதிர்வையும் தடுக்கும். ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க தலைமுடி உதிர்வை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகையால் தேங்காய் பாலை கொண்டு ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலை நாம் பராமரிக்க முடியும்.