Home இந்தியா இந்திய பெண் தூதர் அவமதிக்கப்பட்டதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிடம் வருத்தம்

இந்திய பெண் தூதர் அவமதிக்கப்பட்டதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவிடம் வருத்தம்

688
0
SHARE
Ad

Tamil-Daily-News_36849176884

வாஷிங்டன், டிசம்பர் 19- இந்திய பெண் துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் , அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பாக தனது வருத்தத்தை கூறியுள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான நெருங்கிய மற்றும் ஆழமான உறவுகளுக்கு  பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த தகவலை தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மேரி, பிற நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களுக்கு கிடைப்பது போல் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஜான் கெர்ரி வலியுறுத்தியதாகவும் மேரி தெரிவித்தார்.

அமெரிக்கா வருத்தம் தெரிவித்துளளதையடுத்து தேவ்யானி கோப்ரகடே மீதான வழக்கு நடவடிக்கைகள் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேவ்யானிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், அவர் ஐ.நா.விற்கான இந்திய தூதரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு அவரது தந்தை உத்தம் கோப்ரகடே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதே நேரம் தனது மகள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு விசா பெற்ற விவகாரத்தில், நியூயார்க்கில் பணியாற்றிய இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி, அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அவமதிக்கப்பட்ட விவகாரம் இந்தியாவில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் அவரவர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கவும், அவர்களுகடகான சலுகைகளை நிறுத்தி வைக்கவும் மத்திய அர-சு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்த அமெரிக்கா, வேறு வழியில்லாமல் இந்தியாவிடம் பணிந்தது குறிப்பிடத்தக்கது.