Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் 12.9 அங்குல புதிய ஐ-பேட் – அடுத்தாண்டு அறிமுகமாகலாம்!

ஆப்பிள் நிறுவனத்தின் 12.9 அங்குல புதிய ஐ-பேட் – அடுத்தாண்டு அறிமுகமாகலாம்!

540
0
SHARE
Ad

iPad-Air-Feature-newடிசம்பர் 20 – இந்த ஆண்டில் ஐ-பேட் ஏர் (i-Pad Air) என்ற பெயரில் தட்டைக் கணினிகளை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் சற்றே பெரிய அளவிலான – 12.9 அங்குல – புதிய ரக தட்டைக் கணினிகளை எதிர்வரும் 2014ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தவிருப்பதாக ஆஸ்திரேலியாவின் வணிகப் பத்திரிக்கை ஒன்று ஆரூடம் வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐ-பேட் ப்ரோ என இந்த தட்டைகளுக்கு பெயர் சூட்டப்படும் எனத் தெரிகின்றது.

முன்பிருந்ததை விட சற்றே பெரிய அளவிலான ஐ-போன் ரகங்களை அறிமுகப்படுத்தி, அதனால் பயனீட்டாளர்களின் வரவேற்பு கிடைத்ததை முன்னிட்டு சற்றே பெரிய ஐ-பேட் ரகங்களையும் அறிமுகப்படுத்துவதை தனது வணிக வியூகமாக ஆப்பிள் நிறுவனம் தற்போது கொண்டுள்ளது என ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் இண்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் மற்ற கணினிகளான மேக் ப்ரோ ஏர் மற்றும் மேக்புக் ப்ரோ போன்றவற்றின் திறன் அம்சங்களையும் இந்த புதிய ரக ஐ-பேட் கொண்டிருக்கும் என்பதோடு விசைப்பலகை இல்லாமலும் இவை செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய ரக ஐ-பேட் வகைகள் துல்லியமான, பளிச்செனத் தெரியும் திரைக்கண்ணாடிகளையும் கொண்டிருக்கும்.

தற்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டிருப்பதைப் போன்று 2K மற்றும் 4Kவகை திரைக் கண்ணாடிகளை புதிய ஐ-பேட் கொண்டிருக்கும். 2கே ரகங்கள் ஏப்ரலிலும், 4கே ரகங்கள் அடுத்தாண்டு அக்டோபரிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.