நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகை கெடுத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அசுத்தமாக காட்சி அளிக்கும்.
உங்கள் காதுகளை பராமறிக்க, உங்களது காது மடல்கள் மீது மருந்திட்ட திரவம் (லோஷன்) தடவலாம். பின்,15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் காதுகளில் உள்ள கறுப்பு வளையம் மாயமாகி விடும்.
மேலும், முகத்தில் பூசும் பொடிகளையும் கீரிம்களையும் காதுகளிலும் பூசவும். இப்படிச் செய்வதால் காது மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.
காதுகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஒருபோதும் தவறாதீர்கள். பின்களாலும், ஊக்குகளை பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வதை தவிர்கவும்.