Home நாடு ஜோகூர் ஜசெக: “இளைஞர்களுக்கு வழி விடுங்கள்” – தலைவர் பூவுக்கு எதிராக கோரிக்கை

ஜோகூர் ஜசெக: “இளைஞர்களுக்கு வழி விடுங்கள்” – தலைவர் பூவுக்கு எதிராக கோரிக்கை

634
0
SHARE
Ad

1268ஜோகூர் பாரு, டிச 24 – அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜசெக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு ஜோகூர் மாநிலத் தலைவர் டாக்டர் பூ செங் ஹவ்வை (படம்), அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஜசெக தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செனாய் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் ஜசெக உதவித்தலைவருமான ஆங் கவ் மெங் மற்றும் முன்னாள் பெந்தயான் சட்டமன்ற உறுப்பினர் கிவி தோங் ஹியாங் ஆகிய இருவரும் ஜோகூர் மாநில ஜசெகவிற்கு புதிய தலைமைத்துவம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓங், டாக்டர் பூ ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும், ஜோகூர் ஜசெக தலைவராக மூன்று முறையும் பதவி நீண்ட நாட்களாகப் வகித்துவிட்டார். எனவே இனி இளைஞர்களுக்கு வழி விடுவது தான் சிறந்தது. குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் தோங் மற்றும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் டியோ நி சிங் போன்ற இளைஞர்கள் டாக்டர் பூவுக்குப் பதிலாக பதவியேற்றால் இன்னும் சிறப்பாக கட்சியை வழி நடத்தலாம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளை, டாக்டர் பூவுக்கு எதிராக 5 மில்லியன் ரிங்கிட் வழக்கு தொடுத்துள்ள கிவீ இது குறித்து கருத்துரைக்கையில், ஜோகூர் மாநில ஜசெக விற்கு இளைஞர்கள் தலைமைவகிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், இந்த இரு தலைவர்களும் எதிர்வரும் ஜசெக தேர்தல் எந்த ஒரு பதவிக்கும் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தாமான் நேசா ஜசெக கிளைத்தலைவர் பி.கோகிலவாணி மற்றும் சில கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.