Home நாடு டோல் விலை குறித்து விரிவான ஆய்வு செய்யுங்கள் – ம.இ.கா இளைஞர் பிரிவு கோரிக்கை

டோல் விலை குறித்து விரிவான ஆய்வு செய்யுங்கள் – ம.இ.கா இளைஞர் பிரிவு கோரிக்கை

545
0
SHARE
Ad

tmi-sivarraajh-nov26_300_274_100

கோலாலம்பூர், டிச 28 – டோல் கட்டணங்களை உயர்த்துவதற்கு முன்பாக அது குறித்து விரிவான  ஆய்வு ஒன்றை நடத்தி, அடித்தட்டு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து இறுதி முடிவு எடுக்குமாறு ம.இ.கா இளைஞர் பிரிவு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் சி.சிவராஜா (படம்) கூறுகையில்,

#TamilSchoolmychoice

“உள் நகர்ப்புறங்களின் டோல் கட்டணங்களைக்  குறைப்பதாக  தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருப்பதால், டோல் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர நிதிப் பற்றாக்குறையை போக்க வேறு ஏதாவது வழி உள்ளதா என்று அரசாங்கம் நோக்க வேண்டும்” என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் BR1M உதவித்தொகைக்கு, மக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு உதவ, ஒவ்வொரு தொகுதிகளிலும் இளைஞர் பிரிவைச் சேர்ந்த சிறப்பு குழு நியமிக்கப்படுவார்கள் என்றும், மக்கள் இணையத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பெறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இதற்கு காரணம் என்றும் சிவராஜா தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய BR1M உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.