Home நாடு ரோஸ்மாவின் மகன் நியூயார்க்கில் 110 மில்லியனுக்கு ஆடம்பர குடியிருப்பு வாங்கியுள்ளார்!

ரோஸ்மாவின் மகன் நியூயார்க்கில் 110 மில்லியனுக்கு ஆடம்பர குடியிருப்பு வாங்கியுள்ளார்!

625
0
SHARE
Ad

bad6fa702570b684d567e7e722449133கோலாலம்பூர், டிச 28 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோரின் மகனான ரிசா ஷாரிஸ் அப்துல் அசிஸ் (வயது 36), அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 33.5 மில்லியன் டாலர் (110 மில்லியன்) விலையில் ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.

ரோஸ்மாவின் முதல் கணவருக்குப்  பிறந்த மகனான ரிசா, இந்த குடியிருப்பை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வாங்கியுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2000 ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதாரப் பட்டப்படிப்பை முடித்த ரிசா, வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். 2002 வரை கேபிஎம்ஜி என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் 5 வருடங்கள் பணியாற்றினார். பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

தற்போது ஹாலிவுட்டில் பிரபல நட்சத்திரமாகிவிட்ட ரிசா, ஜோய் மேக்பார்லாண்ட் என்பவருடன் இணைந்து ரெட் கிரானைட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அண்மையில் “வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.